மேலமங்கலம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் ஸ்ரீ மொட்ட கோபுரத்து முனியாண்டி கோயில் காளையின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு இன்று(அக்.20) நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகளும், அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 99 வீரர்களும் பங்கேற்றனர். வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை சிவகங்கை, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் போட்டியினை உற்சாகமாக கண்டுகளித்தனர்.