பிரபல வங்கியில் ரூ. 2கோடி மதிப்பிலான நகை மோசடி

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஐசிஐசிஐ என்ற பிரபல தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டு ஆய்வு நடைபெற்றதுள்ளது மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர் இதில் கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது அதில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த நகைகள் முழுமையாக பரிசோதணை செய்யப்பட்டன. இதில்வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைக்கு பதில்அந்த நகை போலவே உள்ள கவரிங்நகைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில் வங்கி மேலாளர் உள்ளிட்டபணியாளர்கள் இந்த மேசாடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் 533பவுன் நகைகள்மோசடி செய்யப்பட்டிருப்பதும். இதன் மதிப்பு ரூ. 2கோடியே 3லட்சத்து 86ஆயிரம்என்பதும் தெரியவந்துள்ளது இதையடுத்து கிருஷ்ணக்குமார் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி கல்லல் பகுதியில் உள்ள பிரபல வங்கி வங்கி மேலாளர் பட்டுக்கோட்டையை அருகே கோட்டைக்குளம் மேலமேட்டை சேர்ந்த விக்னேஷ்(34), உதவிமேலாளர்காளையார்கோவில் அருகே புலிக்கண்மாயை சேர்ந்த ராஜாத்தி(39), மோசடிக்கு உதவி செய்த இதே ஊரைச்சேர்ந்த ரமேஷ்(38), சதீஷ்(21) ஆகியோரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி