சிவகங்கை: பள்ளி புத்தாக்கத் திட்டத்தின் கீழ்வழிகாட்டி ஒரு நாள் பயிற்சி
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனிசெப் (UNICEF) நிறுவனம் ஆகியவைகளின் சார்பில், பள்ளி புத்தாக்கத் திட்டத்தின் (SIDP 3. 0) கீழ் நடைபெற்ற வழிகாட்டி ஆசிரியருக்கான (Guide Teacher) ஒரு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் துவக்கி வைத்து, தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதில், பள்ளி புத்தாக்கத் திட்டமானது யுனிசெப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி மாணாக்கர்களிடையே புத்தாக்க சிந்தனைகளை உருவாக்கிடும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணாக்கர்கள் தங்களது பள்ளி பருவமான சிறு வயதில் தான் அதிகமாக புத்தாக்க சிந்தனைகளை உருவாக்க முடியும். உலகின் பல இடங்களில், பெரிய நிறுவனங்கள் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க சிந்தனைகளை கொண்டு மிகப் பெரிய தொழில் நிறுவனங்களாக மாற்றமடைந்தும் இருக்கிறது என்றார்.