சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம்

61பார்த்தது
சிவகங்கையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிவகங்கை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆலோசனையின் படி இந்த நூறு நாள் சேலஞ்ச் விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள சமரச தீர்வு மையத்தில் வளாகத்தில் நடைபெற்ற முகாமைசிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம்ஜெ. நடராஜன் தொடக்கி வைத்தார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர், சார்பு நீதிபதி இரா. சுப்பையா முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில். மகிளா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர். கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ பசும்பொன் சண்முகையா, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி என். செந்தில் முரளி, சிவகங்கை சார்பு நீதிமன்றம் சார்பு நீதிபதி பி. வி. சாண்டில்யன், கூடுதல் மகிளா நீதிமன்றம் நீதிபதி வி. கபிலன்,
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஆர். வெங்கடேஷ் பிரசாந்த், நீதித்துறை நடுவர் (எண். 1) பி செல்வம், நீதித்துறை நடுவர் இ. தங்கமணி, நீதித்துறை நடுவர் கூடுதல் மகிளா நீதிமன்றம் ஜே. ஆஃபரின் பேகம், நீதித்துறை நடுவர் ஜே. கார்மேககண்ணன், ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி