அரண்மனை வாசல் பகுதியில் அஞ்சலி செலுத்திய அனைத்து கட்சியினர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி(வயது 72) காலமானதையொட்டி சிவகங்கையில் அவரது உருவப்படத்துக்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது, சிவகங்கை அரண்மனைவாசலில் வைக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச்செயலர் கருப்பசாமி, நிர்வாகிகள் வீரபாண்டி, விஸ்வநாதன், வழக்குரைஞர் மதி, வீரையா, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சந்திரன், வழக்குரைஞர் கிருஷ்ணன், திமுக சார்பில் நிர்வாகி சிங்கமுத்து, திராவிடர் கழக நிர்வாகி புகழேந்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் சண்முகராஜன், உடையார், மதிமுக சார்பில் தீபன் சக்கரவர்த்தி, ஆம்ஆத்மி கட்சி சார்பில் பெரியார் ராமு உள்பட திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.