ராமநாதபுரம்: அபிராமம் சுயம்புலிங்க துர்க்கை அம்மன் முளைப்பாரி உற்சவம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் சுயம்புலிங்கத் துர்க்கை அம்மன் வருடாந்திர பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரியை மேளதாளம் இசை வாத்தியங்கள் முழங்க சக்தி கரகத்தை கோவில் பூசாரி கிருஷ்ணமூர்த்தி முன்னே சுமந்து செல்ல அதனைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பெண்கள் முளைப்பாரிகளை அபிராமம் சுப்பிரமணிய சுவாமி பேருந்து நிலையம் சப்பாணி கோவில் சித்தி விநாயகர் ஆலயங்களை சுற்றி வலம் சென்று அபிராமம் பேரூராட்சி பகுதியில் முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலமாக சென்று ஊர்வலமாக சென்று கமுதிச்சாலையில் உள்ள கலியுக வரதன் ஊரினியில் கங்கை நீரில் முளைப்பாரியை கரைத்து வழிபாடு செய்து சென்றனர். முன்னதாக. சுயம்புலிங்க துர்க்கை அம்மன் ஆலய வளாகத்திற்குள் முளைப்பாரியை வட்டமிட்டு முளைப்பாரி கும்மி பாட்டு ஒயிலாட்டம் நடனமாடி உற்சாகமாக பெண்கள் மகிழ்ந்தனர்.