காலை, இரவு உணவில் பெரும்பாலானோர் சப்பாத்தியை சாப்பிடுகின்றனர். அதில், மீதமான சப்பாத்தியை சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லது என்கின்றனர். சப்பாத்தி பழையதாக மாறும் போது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் எளிமையான வடிவங்களாக உடைந்து, ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. புதிதாக தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை விட பழைய சப்பாத்தியில் கலோரிகள் குறைவு. இதனால் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு பழைய சப்பாத்தி நன்மை பயக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.