இராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி அளவில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக முதுகுளத்தூர் சித்தார்கோட்டை, கோப்பேரிமடம், புள்ளங்குடி, மரப்பாலம், தேவிப்பட்டினம், அம்மாரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர்.