100 செம்மறி ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டும் வழிபடும்

66பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல் நாடு கிராமம்.
இக்கிராம கண்மாய் கரையில் அமைந்துள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம்.

வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதம் 3வது வாரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா இங்கு நடைபெற்று வருகிறது.

கோவில் திருவிழா என்றாலே பெண்கள், பொங்கல் வைக்க முளைப்பாரி எடுக்க, கும்மிபாட்டு என அமர்க்களப்படும். ஆனால் பெண் வாசனையை ஆகாத பெண் தெய்வம் ஒன்று உள்ளது என்றால் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப் பிடாரியம்மன் தான்.

முன்பொரு காலத்தில் 5 ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர் கண்மாய் கரையில் தூங்கிக் கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற காளைமாடு அப்பெண்ணை தாண்டி சென்றதால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததாகவும் சில மாதம் சென்றவுடன் வயிறு பெரியதாக , அந்த பெண்ணின் ஐந்து அண்ணிகளால் நடத்தை கெட்டுப் போனதாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண்ணின் வயிற்றை அறுத்து பார்த்தபோது உள்ளே கன்றுக்குட்டி இருந்ததாகவும் அப்போது அப்பெண் சடலம் மாயமாகி எல்லை பிடாரி அம்மனாக மாறியதாக கதை உண்டு.

பெண்களால் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டதால் பெண்களை வெறுக்கும் எல்லைப்பிடாரியம்மன் முதல் நாடு கிராம மக்களின் கனவில் வந்து தங்கள் ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி