முதுகுளத்தூர் அருகே இடிதாக்கியதில் ஒருவர் பலி: இரண்டு பேர் படுகாயம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வீரம்பல் கிராமத்தை சேர்ந்த சாலமோன் (65) பஞ்சவர்ணம் (55) கபிலன் (55) ஆகிய மூவரும் விவசாய நிலத்தில் கரிமூட்டம் போட்டுக் கொண்டிருந்தபோது உணவு அருந்துவதற்காக அங்குள்ள வேப்பமரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அச்சமயத்தில் திடீரென இடி தாக்கியதில் சாலமோன் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.
பஞ்சவர்ணம், கபிலன் ஆகிய இரண்டு பேரும் காயம் அடைந்தனர்.
இறந்த சாலமோன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காயமடைந்த பஞ்சவர்ணம் மற்றும் கபிலன் ஆகிய இரண்டு பேரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்