ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நத்தம் ஊராட்சி அண்ணாநகரில் உள்ள ஸ்ரீஅழகுமீனாள் அம்மன் ஆலய வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளஆனந்த விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு பக்தர்கள் அக்கினி சட்டி ஏந்தி 108 பால்குடங்களுடன் மேளதாளம் இசை வாத்தியங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக கிராமத்தின் பரிவார குல தெய்வங்களை சுற்றி வலம் சென்று முக்கிய வீதிகளின் வழியாக வலம் சென்ற பக்தர்கள் அழகு மீனாள் அம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்
அதனைத் தொடர்ந்து அழகு மீனாள் அம்மனுக்கு பாலாபிஷேகம் 16 வகையான மூலிகை திரவிய விஷயம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது
இதில் அண்ணாநகர் கிராம ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம்வழங்கப்பட்டது