திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுவரை சார்பதிவாளர் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளடக்கிய சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இதுவரை சார்பதிவாளர் வரவில்லை இதனால் பத்திரப்பதிவில் செய்வதில் காலதாமதம் ஏற்பதோடு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழக அரசுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழக அரசுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது
சார்பதிவாளர் 12 மணிக்கு மேல் வருவதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து பல நாட்களாக இந்த நிலைமை இருந்து வருவதாகவும் இதனால் பத்திரப்பதிவில் சிக்கல் நீடித்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கவலை தெரிவித்தனர்.
இது பற்றி விசாரித்த போது திருவாடானையில் ஏற்கனவே இருந்த சார் பதிவாளர் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு சார்பதிவாளர் நியமிக்காமல் சாயல்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதியில் இருந்து பொறுப்பு அதிகாரியாக வருவதாகவும் அதனால் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். ஊழல மற்றும் லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு மற்று புகார் தொடர்பு எண்கள் குறித்த பதாகை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் நிரந்தர சார் பதிவாளர் நியமிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ,