பொதுமக்கள் காத்து இருக்கும் கட்டிடம் ஆய்வு

55பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது

இங்கு வரும் 30-ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா 62 ஆவது குருபூஜை விழா நடைபெற உள்ளது

முத்துராமலிங்க தேவர் நினைவிடம் முன்பு 155 லட்சம் மதிப்பில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்த 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காத்திருக்கும் அறை கட்டப்பட்டு வருகிறது.

அதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வா. வேலு மற்றும் பால்வளத்துறை மற்றும் கதர் வாரிய துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவர் நினைவிடத்திலும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வா. வேலு

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் 155 லட்சம் மதிப்பிலான பொதுமக்கள் காத்திருப்பு கூடம் முதல்வர் ஆணையின்படி கட்டப்பட்டு வருகிறது வரும் 30ஆம் தேதிக்குள் அதன் பணிகளை முடிக்க ஆணையிட்டு உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர்

டேக்ஸ் :