கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

76பார்த்தது
கமுதி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீஅரியநாச்சியம்மன் கோவிலின் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு பெரியமாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த போட்டியில் பெரிய மாடு பந்தயத்தில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், சின்ன மாடு பந்தயத்தில் 11 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இந்த மாட்டு வண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கைதட்டி ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி