
29 குண்டுகளால் டீச்சர் சுட்டுக்கொலை?
கோவையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற விவகாரத்தில், 29 குண்டுகளை பயன்படுத்தியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், ஒரே குண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு குண்டுக்குள் 29 pellets, அதாவது பால்ரஸ் உருண்டைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிருகங்களை வேட்டையாட பயன்படுத்து துப்பாக்கியாகும். இந்த நாட்டுத் துப்பாக்கிகளில் ஒருமுறை லோட் செய்தால் ஒருமுறை மட்டுமே சுட முடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.