திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நீதிபதிகளை தலைமையில் நடைபெற்றது.
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நீதிபதி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி மனிஷ் குமார், தலைமையில், நீதித்துறை நடுவர் நீதிபதி ஆண்டனி ரிசார்ட் சேவ் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதிகள் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து சொல்லுவது விட எல்லா இடத்திலும் பெண்களுக்கு சமமான அந்தஸ்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்விற்கு முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, ஓவியம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பெண் வாக்கறிஞர் கலா, பாக்கிய லெட்சுமி, மூத்த வழக்கறிஞர்கள் சிவராமன், கண்கள், தனபால் வழக்கறிசங்க பொருளாளர் வேலாயுதம், அரசு வழக்கறிஞர் கணேசபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற காவலர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏளமானவர் கலந்து கொண்டார்கள்