இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. "இப்தார் நோன்பு நிகழ்ச்சியை விஜய் சீர்குலைத்துள்ளார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிகவும் கண்ணியமானது. இதில் சம்பந்தமில்லாத ரவுடிகள் பங்கேற்றது, இஸ்லாமியர்களை கேவலப்படுத்தியதாக உணர்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.