ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் மாணவனின் கைவிரல்கள் வெட்டப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் விரல்களை இணைக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடது கையில் 5 விரல்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், 4 விரல்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவனுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.