டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, விசிக எம்.பி.க்களான திருமாவளவன், ரவிகுமார் ஆகியோர் சந்தித்து பேசியதோடு மனுவும் அளித்தனர். அதில், "மத்திய அரசின் 16வது நிதிக்குழு, மாநிலங்களில் வரி பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களின் நிதி பகிர்வை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.