
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: திமுக - பாஜக இடையே வார்த்தை மோதல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற பல விஷயங்களை முன்னெடுத்து இரு தரப்பினரும் காரசாரமாக பேசினார்கள். அவைத்தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.