ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்கள் குறிப்பிட்ட எடையில் அரிசிக்கு பதிலாக கோதுமை வாங்கலாம். மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கும் கோதுமை அளவை 8,576 டன்னாக குறைத்தது. இதனால் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ வரை தரப்பட்ட கோதுமை தற்போது 2 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலில் வருபவர்களுக்கே கோதுமை வழங்கப்படுவதால், பலர் கோதுமை கிடைக்கவில்லை என்று தகராறு செய்வதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.