தஞ்சாவூர் - Thanjavur City

விபத்தை தடுக்க 7 இடங்களில் பாலம் அமைக்க கோரிக்கை

விபத்தை தடுக்க 7 இடங்களில் பாலம் அமைக்க கோரிக்கை

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லத்தில் இருந்து செங்கிப்பட்டி வரை 7 இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லம் பைபாஸ் சாலையில் தஞ்சை திருச்சி செல்லும் பேருந்துகள் அனைத்தும் வல்லம் வழியாக இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் போதும், திருச்சியில் இருந்து வல்லம் வரும்போது பைபாஸ் சாலை பகுதியில் பிரியும் சாலை வழியாக இயக்கப்படுகிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வல்லம் வருபவர்கள் பைபாஸ் சாலை அருகே வல்லத்துக்கு பிரியும் சாலையில்தான் செல்ல வேண்டும். இப்பகுதியிலும் பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தை குறைக்க போலீசார் பேரி கார்டு வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரத்தில் பேரிகார்டையும் வாகனங்கள் மோதி கீழே தள்ளிவிட்டு செல்கிறது. இப்பகுதியில்தான் மற்ற இடங்களை விட கூடுதலாக விபத்து நடக்கும் பகுதியாகும். இப்பகுதியில் மட்டும் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. விபத்தின் காரணமாக 360 பேர் இறந்துள்ளனர். எனவே தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் பாலங்கள் அமைத்து பொதுமக்களை விபத்துகளில் இருந்து காக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా