சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, டெல்லி, இமாச்சல், ம.பி., உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.