தஞ்சாவூர்: 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்

63பார்த்தது
தஞ்சாவூர்: 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்
தஞ்சாவூர் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய இளைஞரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே வல்லம் - திருமலைசமுத்திரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் பிரிவினர் வியாழக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆப்ரகாம் மகன் ஆண்ட்ரோஸ் (34) என்பதும், வல்லம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கால்நடை பண்ணைக்குக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் திருமலைசமுத்திரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந் 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஆண்ட்ரோஸை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி