தஞ்சாவூர்: போலி நிறுவனங்களில் முதலீடு வேண்டாம்.. காவல் ஆய்வாளர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த "ஹம்மது டிரான்ஸ்போர்ட்" நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெற்றும், ஹம்மது டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதில் வரும் லாபத்தொகையில் பங்கு தருவதாகக் கூறி, பெறப்பட்ட தொகையை திருப்பி தராமலும் லாபத்தொகையில் பங்கு தராமலும் ஏமாற்றியதாக வரப்பெற்ற புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கானது தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் மேற்படி ''ஹம்மது டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டார்கள் யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகை திருப்பி தரப்படாமல் மேற்படி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள், தஞ்சாவூர் மருத்துவகல்லூரி சாலை, 57 B, ராஜப்பா நகர் முதல் தெருவில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி புகார் கொடுக்கலாம். மேலும், பொதுமக்கள் இது போன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடுகளை செய்து ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெ. ரேவதி தெரிவித்துள்ளார்.