தேனி அருகே தனியார் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்து பேருந்து முழுவதும் எரிந்து சேதமானது. இக்கோர விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அரசாங்கம் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நல்வாய்ப்பாக பேருந்திலிருந்த பயணிகள் கீழே இறங்கியதால் அதிக அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.