இணையத்தில் வைரலாக ஒரு வீடியோவில் கரடி ஒன்று தனது குட்டியை பாதுகாப்பதற்காக, புலியுடன் சண்டை போடுவதை பார்க்க முடிகிறது. இறுதியில், அந்த புலியானது, கரடிகளைவிட்டே செல்வதையும் பார்க்க முடிகிறது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும் இந்த கரடியின் குணத்தை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ளார்.