அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 7ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிடவும், தமிழகத்தில் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக தலைவர் சி. கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகின்ற 07. 10. 2024 (திங்கள் கிழமை) அன்று காலை 9. 00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.