பிக்பாஸ் சீசன் 8 ஷோ இன்று (அக் 06) முதல் ஒளிபரப்பாகவுள்ளது. அந்த வகையில் இந்த சீஸனின் முதலாம் பங்கேற்பாளராக நுழைந்தார் ரவீந்தர் சந்திரசேகரன். தயாரிப்பாளராக இருக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தன்னுடைய யூ ட்யூப் சேனலில் தினமும் விமர்சித்து நிகழ்ச்சிகளை பதிவிட்டுள்ளார். சொந்த வாழ்வில், டிவி நடிகர் மகாலஷ்மியை திருமணம் செய்த நிலையில், அதிகம் பேசப்பட்டார்.