வீரமரசன்பேட்டையில் நவ.13 இல் மக்கள் நேர்காணல் முகாம்
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-ஆம் புதன்கிழமை "மக்கள் நேர்காணல் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 13.11.2024 (புதன்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், பூதலூர் சரகம், வீரமரசன்பேட்டை கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடத்திட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். மேலும், 05.11.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று முதல் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வீரமரசன்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.