அறந்தாங்கி - Aranthangi

வீடியோஸ்


புதுக்கோட்டை
Jun 23, 2024, 12:06 IST/புதுக்கோட்டை
புதுக்கோட்டை

சிதலடைந்த பயணியர் நிழற்குடையை சரிசெய்ய பொதுமக்கள் வேண்டுகோள்

Jun 23, 2024, 12:06 IST
புதுக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக நெடுஞ்செழியன் பதவி வைத்த போது பெருங்களூர் கிராமத்தின் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடை பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்தது. மேலும் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களூர் என்ற இடத்தில் இந்த பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளதால் அப்பகுதி சுற்றுப்புறத்தில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ மாணவியர் பெருங்களூரிலிருந்து மற்ற ஊருக்கு செல்லும் அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் இருந்தது இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த பயணிகள் நிழற்குடை மேல் போடப்பட்டிருந்த ஹாஸ்பிட்டாஸ் திடீரென உடைந்து விட்டது இதனால் அந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி உற்றனர் இந்நிலையில் இது குறித்து அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தோம். இரவு நேரத்தில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை அடித்து நொறுக்கி செல்கின்றனர். இதுகுறித்து பலமுறை நாங்கள் அதிகாரியிடம் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே பொதுமக்களின் கோரிக்கையேற்று உடனடியாக இந்த பயணிகள் நிழற்குடையை சரி செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டார்.