அறந்தாங்கி - Aranthangi

வீடியோஸ்


புதுக்கோட்டை
May 16, 2024, 08:05 IST/ஆலங்குடி
ஆலங்குடி

ஆலங்குடி பலா விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா?

May 16, 2024, 08:05 IST
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் பலாப்பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில் சுமார் 2000 ஏக்கரில் பலாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த பழங்கள் கீரமங்கலம் மாங்காடு, புளிச்சங்காடு, பனங்குளம் ஊர்களில் உள்ள ஏல கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன அங்கிருந்து மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது இந்த பகுதி பலாப்பழம் சுமார் 40 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து செல்வார்கள் என்றனர் விவசாயி கூறுகையில் இங்கு விளையும் பலாப்பழங்களை பாதுகாக்க இந்த பகுதியில் குளிர்பதனை கிடங்கு எதுவும் இல்லை இதனால் அறிவடை செய்யப்பட்டவுடன் அது அதை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குளிர்பதன கிடங்கு இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்றார் பலாப்பழங்களை சேமித்து வைத்து விற்பனை செய்ய குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் பல மாநிலங்களுக்கு செல்லும் மாங்காடு பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.