புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல். என் புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மதுரை கண் அரவிந்த் மருத்துவமனை மற்றும் செலக்சன் பள்ளி சார்பில் இலவச பொது கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் தங்கதுரை மற்றும் பள்ளி தாளாளர் கண்ணையன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.