அறந்தாங்கி - Aranthangi

கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் முதல்வருக்கு காங். எம்எல்ஏ கோரிக்கை!

கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் முதல்வருக்கு காங். எம்எல்ஏ கோரிக்கை!

அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது அறந்தாங்கி நகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சிறிதாக உள்ளது மக்கள் தொகை அதிகரித்து வருவதால் நகரின் எல்லை பகுதியும் விரிவடைந்து வருகிறது. இதனால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதிலும், போதிய பாதுகாப்பு அளிப்பதிலும், குற்ற செயல்களை விரைந்து கண்டுபிடிப்பதிலும் மிகுந்த சிரமம் நிலவுகிறது. இதை தவிர்க்க அறந்தாங்கி டவுன் போலீஸ் ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டும் நகர்ப்புறம் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் ஆவுடையார் கோவில் தாலுகா கரூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டிடம் கட்ட இந்த நிதியாண்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வீடியோஸ்