புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் ஊராட்சியில் இன்று ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த கட்டடத்திற்கு கலைஞரின் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் இந்த கட்டடத்தை திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.