பொங்கல் தொகுப்பு ஜன.9 முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதையொட்டி அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் தொகுப்பை பெற ரேஷன் அட்டைதாரர்கள் நேரில் வர வேண்டும் என்றும், கைவிரல் ரேகையை பதிவு செய்து, பிறகு அங்குள்ள புத்தகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். மாற்று நபர்களை அனுப்பி வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.