புதுக்கோட்டை மாவட்ட கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர்கள் சங்கம் நடத்தும் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ அம்மன் மஹாலில் நடைபெற உள்ளது. அதற்காக கால்நடை கருவூட்டாளர்கள் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டு சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் கலைக்கண்ணன், மாநில தலைவர் சந்திரசேகரன், மாநில செயலாளர் விஜயராகவன், செயலாளர் விஜய ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.