புதுகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டு திடலில் மாவட்ட மருத்துவத்துறை சார்பில் காலையில் நடை பயிற்சி மேற்கொள்ளவோருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ரத்த கொதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. மாவட்ட மருத்துவ தலைமை அலுவலர் ராம் கணேஷ் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களை பரிசோதனை செய்து கொண்டனர்.