தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில், வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகள் இடையே வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டி வந்த நபர்களுக்கு மரக்கன்றுகளையும் இனிப்புகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் இன்று (01. 10. 2024) வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கிப் பாராட்டினர். அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், தலைக்கவசத்தினையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இனிவரும் காலங்களில் மீண்டும் இதுபோன்று தலைக்கவசம் அணியாமல் சென்றால் போக்குவரத்து விதியின்படி அபராதம் விதிக்கப்படும் என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.