பரிசோதனைகள் முடிந்து விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (அக்., 01) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தோம். வழக்கமான பரிசோதனகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். ரஜினிக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.