தொழிற்சங்க உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெரம்பலூரில் சிஐடியு வினர் சாலை மறியல் போராட்டம் 53 பேர் கைது.
காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை ஏற்க மறுக்கும் சாம்சங் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் , சட்டப்படி போராட்டம் நடத்தும் தொழிலாளர்களையும் அவர்களுக்கு தலைமை தாங்கும் சிஐடி யு- தலைவர்களை கைது செய்யும் காவல்துறையினரை கண்டித்தும் , தொழிற்சங்க உரிமைகளுக்கு போரடும் டும், தொழிலாளர்களுக்கு ஆதரவாக, மாநிலம் முழுவதும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று பெரம்பலூர மாவட்ட சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில், ஆர்ப்பாட்டம் செய்தனர், அப்போது புதிய பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், உடனடியாக மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 53 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.