கோவை மாவட்டம், அன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த சரக்கு வாகனம் சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டட தொழிலாளி ரசூல் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.