ஹரியானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (அக்.1) பகதூர்கர் நகரில் ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்த போது, பிரச்சாரத்திற்கு நடுவே தொண்டர்கள் ராகுல்காந்திக்கு பஜ்ஜி கொடுத்தனர். அப்போது அருகில் இருந்து காவலர் ஒருவருக்கும் ராகுல்காந்தி பஜ்ஜி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.