அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில், பங்கேற்ற நடிகை மீனாவிடம் ஹிந்தியில் பேசும்படி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “இது ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? நான் இது தென்னிந்திய விழா என நினைத்தேன். தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள். நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று பதிலளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.