தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகள் மும்மொழி கொள்கையை செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்வி கொள்கையிலும் மும்மொழி கல்வியை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே தமிழக அரசு மாநில கல்வி கொள்கையை உருவாக்கியுள்ளனர். அதில் என்ன இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதனால், தேசிய கல்வி கொள்கை அல்லது தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையில் எதனை பின்பற்ற வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.