குன்னம் - Kunnam

பெரம்பலூர்: போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூர்: போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் Cr. No. 20/21 U/s 5 (m) r/w 6 of POCSO Act @ 366(A), 5(m) r/w 6 of POCSO act பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. . நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் 15. 10. 2024-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிரதீப் (23) என்பவருக்கு பிரிவு 366 (A) ன் கீழ் குற்றத்திற்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50, 000 அபராதம் விதித்தும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் பிரிவு 5(m) உ/ இ 6 ன் கீழ் குற்றத்திற்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதம் விதித்தும் அபராதம் கட்டத் தவறினால் குற்றவாளிக்கு மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை என்றும் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

வீடியோஸ்


பெரம்பலூர்