கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான பதிவு ஆணை வழங்கிய ஆட்சியர்

68பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான பதிவு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று(செப்.27) சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் வழங்கினார். தமிழ்நாட்டிலேயே அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ள முதல் மாவட்டம் என்ற பெருமையினை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி