குன்னம் - Kunnam

குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது

குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று (செப்.20) பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராம பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி அக்கிராம பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்டவர், காவலர் கௌதம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நடத்திய சோதனையில் பேரளி கிராமத்தில் அய்யாசாமி என்பவர் தனது வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்றது தெரியவந்தது. மேலும் அவரை விசாரணை செய்ததில் வாடகை வீடு ஒன்றை எடுத்து அதில் ரூ. 1,61,280 மதிப்புள்ள 261. 228 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அய்யாசாமியை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் மற்றும் 15,700 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்