பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணியாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவித்த போது, பணிக்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கொரோனா காலகட்டத்தில் இருந்து , நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு செய்து தர வேண்டும் மேலும் காப்பீடுசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், நீண்ட காலம் வழங்கிய விடுமுறை ஊதியத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது பகுதி நேர ஊழியர்களை இருப்பவர்களை முழு நேர ஊழியராக பணி வழங்கிட வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும், கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை என்றால் வரும் 28ஆம் தேதி குன்னம் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.