வாகன விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை

54பார்த்தது
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று விழுப்புரம். பெரம்பலூர் வழியாக வந்து கொண்டிருந்தது. பேருந்தை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகேயுள்ள பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(46) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள முருக்கன்குடி பிரிவு பாதை பகுதியில் இன்று பேருந்து வந்து கொண்டிருந்தபோது கல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு இரும்பு பொருட்கள் ஏற்றி வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி அதன் ஓட்டுனர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து நிலை தடுமாறி லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த செல்வராணி(27) செல்லம்மாள்(65) ஜெயந்தி(45) காயத்ரி(19) நல்லம்மாள்(40) கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு(54) பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செந்தாமரை(18) மற்றும் பெயர் விலாசம் தெரியாத ஒருவர் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி